Tuesday, September 11, 2012

முழுமையும் மன்னிக்கப்பட்டது

எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ. எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ. அவர்கள் பாக்கியவான்கள். ( ரோமர் 4:7 )

மகன் செய்த குற்றத்திற்க்காக அவனை ஒரு மணிநேரம் அறையிலே தனிமையில் இருத்திவிட்டார். தந்தையார். ஒரு மணிநேரம் கழித்ததும் ஒரு கடதாசி தாளுடன் அறையைவிட்டு வெளியில் வந்த மகன் நேராக தகப்பனிடம் சென்றான். அப்பா நான் செய்த தவறுகளையெல்லாம் இத்தாளிலேயே எழுதியுள்ளேன். நான் இனிமேல் இப்படியாகச் செய்யமாட்டேன். என்று மனம் வருந்தி கேட்டுக்கொண்டான். அத்தாளை வாங்கிய தந்தையார் அதில் உள்ளவற்றையெல்லாம் ஒரு இறப்பரினால் அழித்துவிட்டு மகனே எல்லாவற்றையும் நான் மன்னித்து விட்டேன். இனி நல்லவனாய் பொறுப்புள்ளவனாய் நடந்து கொள்வாய் என்று நம்புகிறேன் என்றார்.

எழுதப்பட்ட தாள் எவ்விதம் வெறுமையாக்கப்பட்டதோ அதுபோலவே கறைபடிந்த எமது பாவ வாழ்வும் இயேசுவின் இரத்தத்தினால் ஒரு வெள்ளை தாளைப்போல சுத்திகரிக்கப்படுகிறது. தீயவர் திருடர், கொடியவர், கொலைஞர் இப்படியாக எத்தனையோ பேரின் வாழ்வு தேவனால் தொடப்பட்டு மாற்றங்கள் கண்டிருக்கிறது. செய்த குற்றத்திற்க்காக துக்குத்தண்டனைக்கு காத்திருந்த எத்தனையோ பேரின் வாழ்வும்கூடää சிறச்சாலையில் வைத்து தேவனால் தொடப்பட்டுள்ளது. துக்கு தண்டனையால் அவர்களின் உயிர் உடலைவிட்டு பிரிந்து போனாலும், நித்திய நித்தியமாய் தேவனோடுகூட வாழும் சிலாக்கியத்தை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். நாம் விரும்பி பாடுகிற "ஒ தேவனுக்கு மகிமை என்னை துக்கியெடுத்தார்". என்ற பாடலை பாடியவரும் ஒரு துக்கு தண்டனை கைதியாகும். அவர் இரட்சிக்கப்பட்ட பின்னர், துக்கு தண்டனைக்காக அவரை அழைத்துச்சென்ற போதே அவர் இப்பாடலை இயற்றிப் பாடியதாகக் கூறப்படுகிறது. அவர் சந்தோஷத்தோடே அக்கரையில் நான் நின்று அவரை என்றென்றும் பாடுவேன் என்று பாடிச் சென்றதாகக் கூறப்படுகின்றது.

தேவன் நமக்கு பாவத்திருந்து தரும் விடுதலை முற்றிலும் முழுமையானது. பாவத்தை வெறுத்து வெற்றியோடு வாழவே தேவன் எம்மை இரட்சித்திருக்கிறார். மாறாக பாவத்தைச் செய்து, செய்து மீண்டும் மீண்டும் மன்னிப்பு பெறவும் இரட்சிப்படையவுமல்ல என்பதை நாம் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். தேவன் தரும் வெற்றியானது முற்றிலுமான முழுவதுமான வெற்றி. அதைப் பெற்றுக்கொண்டவர்கள் வாழ்வில் வீழ்ச்சிக்கு இடமேயில்லை. விழுந்தாலும் மீண்டும் வெற்றியோடு எழுந்து வெற்றி வாழ்வு வாழ்வார்கள். எனனில் அவர்கள் இப்பொழுது இயேசுவுக்குச் சொந்தமானவார்கள்.

எனவே அன்பான நண்பர்களே இறைவன் தருகின்ற இலவசமான இரட்சிப்பை பெற்று இறைவனுடைய அன்பில் வளர்ந்து அனேகருக்கு பிரியோஜனமாய் மாறுவோமாக..

அனுதினமும் கடைப்பிடிக்க பத்து கட்டளைகள்

1.ஒன்றை செய்யுங்கள்:
பின்னானவைகளை மறந்து, முன்னானவைகள் நாடு (பிலி 3:13 - 20)

2. இரண்டையும் விட்டுவிடாதீஙக:
கிருபையும், சத்தியமும் (நீதி 3: 2 - 3)

3. மூன்றில் நிலைத்திருங்கள்:
விசுவாசம், நம்பிக்கை, அன்பு (1கொரி 13:`13)

4. நான்கையும் தரித்துக் கொள்ளுங்கள்:
இயேசு கிறிஸ்து, ஒளியின் ஆயுதங்கள், புதிய மனுஷனை, நீடிய பொறுமையை (ரோமர் 13:14, எபே 4:24, கொலோ3:12)

5. ஐந்தையும் அழித்துப் போடுங்கள்:
விபச்சாரம், அசுத்தம், மோகம், துரிச்சை விக்கிரகாராதனை, பொருளாசை (கொலோ 3:5,6)

6. ஆறையும் வெறுத்துவிங்கள்:
மேட்டிமையான கண், பொய் நாவு, குற்றாமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும்கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், அபத்தம் பேசும் பொய்சாட்சி நீதி6:16 -19

7. ஏழையும் எடுத்துக் கொள்ளுங்கள்:
சத்தியம் என்னும் கச்சை, நீதியென்னும் மார்க்கவசம், சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை, விசுவாசமென்னும் கேடகம் இரட்சணியமென்னும் தலைச்சீரா, தேவ வசனமாகிய ஆவியின் பட்டயம், ஜெபம் பண்ணி விழித்திருத்தல் (எபே 6: 13 - 18)

8. எட்டையும் விட்டுவிடாதீர்கள்
விசுவாசம், தைரியம், ஞானம், இச்சையடக்கம், பொறுமை, தேவபக்தி, சகோதர சிநேகம், அன்பு (2பேதுரு 1:5 - 9)

9. ஒன்பதையும் அனுபவமாக்குங்கள்:
(கலா 5:22 - 28) (அ)ஆவியின் கனிகள்: அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். (ஆ) ஆவியின் வரங்கள்: ஞானத்தை போதிக்கும் வசனம், அறிவை உணர்த்தும் வசனம், விசுவாசம்,குணமாக்கும் வரங்கள், அற்புதங்களைச் செய்யும் சக்தி, தீர்க்கதரிசனம் உரைத்தல், ஆவிகளப்பகுத்தறிதல், பற்பல பாஷைகளை பேசுதல், பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல்.

10. பத்தையும் பற்றிக் கொள்ளுங்கள்:
(மத் 22:35 - 40) கர்த்தருடைய கற்பனைகள்